கடுமையான பனிப்பொழிவு காரணமாக ஐரோப்பா முழுவதும் 55 பேர் உயிரிழப்பு!
இதுவரை 55 பேர் ஐரோப்பா கண்டம் முழுவதும் நிலவி வரும் கடுமையான பனிப்பொழிவின் காரணமாக, உயிரிழந்தனர்.
அந்த கண்டம் முழுவதும் மைனஸ் 10 டிகிரி செல்சியசுக்கும் குறைவான பருவநிலை நிலவுவதால், பனிப்பொழிவு மோசமாக காணப்படுகிறது. பனிக்கட்டிகள் தேங்கி நெடுஞ்சாலைகள் மூடப் பட்டிருப்பதால், வாகனப் போக்குவரத்து தடைபட்டுள்ளது. விமானம், ரயில் சேவைகளும் முடங்கியுள்ளன. பள்ளி, கல்லூரிகளும், வணிக நிறுவனங்களும் திறக்கப்படவில்லை. மோசமான பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டு, போலந்து நாட்டில் மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
செக் குடியரசு, லிதுவேனியா, பிரான்ஸ், ஸ்பெயின், செர்பியா என ஐரோப்பா முழுவதும் 55 பேர் உயிரிழந்தனர். இன்று பனிப்புயல் வீசும் அபாயம் இருப்பதாகவும், எனவே பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அந்தந்த நாட்டு அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.