அடேங்கப்பா!இந்தியாவிற்கு ரூ.8,800 கோடி கொரோனா நிவாரண நிதியளித்த இளம் தொழிலதிபர் விடாலிக் புட்டரின் ..!

Default Image

எத்திரியம் என்ற கிரிப்டோ கரன்சியை உருவாக்கியவரும்,இளம் தொழிலதிபருமான விடாலிக் புட்டரின் என்பவர் இந்தியாவின் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.8,800 கோடியை  நிதியுதவியாக அளித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.இதனால்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.இதன்காரணமாக, நாட்டில் உள்ள பல மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க போதுமான கொரோனா தடுப்பூசி மருந்துகள்,ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிகள் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து,இந்தியாவிற்கு வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசி மருந்துகள்,ஆக்சிஜன் உபகரணங்கள் போன்ற உதவிகள் கிடைத்த வண்ணம் உள்ளன.மேலும்,பல திரைப்பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் போன்றோர் கொரோனா தடுப்பு பணிக்காக நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில்,எத்திரியம் என்ற கிரிப்டோ கரன்சியை உருவாக்கியவரும்,ரஷ்யா நாட்டைச் சேர்ந்த இளம் தொழிலதிபருமான விடாலிக் புட்டரின் என்பவர் இந்தியாவின் கொரோனா தடுப்பு பணிகளுக்காக தொழில்முனைவோர் சந்தீப் நளிவால் என்பவர் நிறுவிய ‘இந்திய கோவிட் நிவாரண நிதி’ என்ற அமைப்புக்கு ரூ.8,800 கோடியை (1.5 பில்லியன்) நிதியுதவியாக அளித்துள்ளார்..

அதாவது,சுமார் 1.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள 50 டிரில்லியன் ‘ஷிப்'(SHIB) டோக்கன்களை விடாலிக் நன்கொடையாக வழங்கினார்.

இதனையடுத்து,விடாலிக் நிதியுதவி அளித்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக,சந்தீப் நளிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது,”நன்றி விடாலிக் புட்டரின்.எந்தவொரு சமூகத்தையும் குறிப்பாக SHIB உடன் தொடர்புடைய சில்லறை சமூகத்தை பாதிக்கும் எதையும் நாங்கள் செய்ய மாட்டோம்.இந்த நிவாரண நிதி பொறுப்புடன் செலவிடப்படும்” என்று கூறினார்.

இதற்கு முன்னதாக, ஏப்ரல் மாதத்தில் விடாலிக் சுமார் 6,00,000 டாலர் (சுமார் ரூ. 4.41 கோடி) ஈதர் டோக்கன்களை ‘இந்திய கோவிட் நிவாரண நிதி’க்கு நன்கொடையாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்