அடி தூள்.! வசூலில் மாஸ் காட்டிய எதற்கும் துணிந்தவன்.!
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துள்ளார். சரண்யா, சத்யராஜ், வினை, சூரி,புகழ், போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்திருக்கிறது. மேலும், இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் கடந்த 10-ஆம்தேதி வெளியானது வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்து வருகிறது. இந்நிலையில், தற்போது வெளியான நாளிலிருந்து தற்போது வரை உலகம் முழுவது எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, இந்த படம் வெளியான நாளிலிருந்து ததற்போது வரை 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. நாளுக்கு நாள் இப்படத்தின் வரவேற்பு மற்றும் வசூல் அதிகரித்து செல்கிறது. வரும் நாட்களில் இன்னும் அதிகமாக வசூல் செய்யும் என கூறப்படுகிறது.