5 மொழிகளில் வெளியாகும் எதற்கும் துணிந்தவன் – படக்குழு அறிவிப்பு
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவிப்பு.
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் எதற்கும் துணிந்தவன். இந்த இந்தப் படத்தின் நாயகியாக ப்ரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரத்னவேலு ஒளிப்பதிவாளராக பணியாற்ற இசையமைப்பாளராக இமான் உள்ளார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. குடும்ப கதை களத்தை கொண்ட இப்படத்தை வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி வெவெளியிடப்படும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பையும் படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த நிலையில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் சூர்யாவின் சூரரைப்போற்று, ஜெய்பீம் ஆகிய இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்து ஓடிடியில் வெளியான நிலையில் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#ET ????Coming to you in 5 languages???? #எதற்கும்துணிந்தவன் #ఈటి #ಈಟಿ #ഇറ്റി #ईटी #EtharkkumThunindhavan @Suriya_offl @sunpictures #Sathyaraj @immancomposer @RathnaveluDop @priyankaamohan @sooriofficial @AntonyLRuben @jacki_art @VijaytvpugazhO @thangadurai123 #ETOnFeb4th pic.twitter.com/nZGezQd65t
— Pandiraj (@pandiraj_dir) December 13, 2021