ஆண், பெண் இரு பாலருக்கும் சமமான ஊதியம்: ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று முதல் அமல்.
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஆண், பெண் இருவருக்கும் சமமான ஊதியம் வழங்குவதற்கான நடைமுறை இன்று அமல்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஆண், பெண் இருவருக்கும் சமமான ஊதியம் வழங்குவதற்கான நடைமுறை இன்று அமலுக்கு வருகிறது. இதுகுறித்து, அதிபர் ஷேக் கலிபா பின் சையத் அல் நயான் வெளியிட்டுள்ள உத்தரவில், வேலைவாய்ப்பில் நிலைமைக்கு ஏற்ப ஒரே பணியில் உள்ள ஆண், பெண் இரு பாலருக்கும் சமமான ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிட்டுள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மனிதவளத்துறை ஆகஸ்ட் 25 அன்று ஊதியம் வழங்குவதில் பாலின சமத்துவத்தை கடைபிடிப்பதற்கான முயற்சியை தொடங்கியது. புதிய திருத்தங்கள் பாலின சமத்துவத்தை நிலைநிறுத்துவதற்கு நாட்டின் பிராந்திய மற்றும் சர்வதேச நிலையை வலுப்படுத்த உதவும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2020-ஆம் ஆண்டில் உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையின்படி, பாலின ஊதிய இடைவெளியைக் குறைப்பதில் பிராந்திய நாடுகளை ஐக்கிய அரபு அமீரகம் வழி நடத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)