இடைத்தேர்தல் ஆட்டத்தை தொடங்கிய EPS , OPS : “அதிமுக வெற்றி கணக்கு” அதிர்ச்சியில் ஸ்டாலின் , TTV

Default Image

திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தலில் OPS , EPS வெற்றிக்கான வியூகங்களை வகுக்க ஆரம்பித்து விட்டனர்.இது திமுக , TTV அணியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தல் களை கட்டத் தொடங்கிவிட்டது. அதிமுக, திமுக, அமமுக கட்சியினர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்நிலையில், அதிமுக நிர்வாகிகள், சைக்கிள் பயணம், அண்ணா பிறந்த நாள், பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் என கட்சியினரை உற்சாகமூட்டி வருகின்றனர்.

Image result for அதிமுக

கட்சியினரை மட்டும் கவனித்தால் போதாது என்பதால் கடந்த 4 நாட்களாக அரசு திட்டங்கள் மூலம் மறைமுக பிரச்சாரம் நடக்கிறது.

பெண்களுக்கு வளைகாப்பு, அரசு நலத்திட்ட உதவி, வார்டு வாரியாக மக்களிடம் மனுக்களை வாங்குதல் என தொகுதி முழுக்க அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ராஜன்செல்லப்பா எம்எல்ஏ உள்ளிட்டோர் களப்பணி செய்து வருகின்றனர்.

Image result for ராஜன்செல்லப்பா எம்எல்ஏ

இதுதொடர்பான முகாமில் பங்கேற்போருக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் உடனுக்குடன் வழங்கப்படுகின்றன. மேலும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்படுகிறது. இதுபோன்ற உதவிகள் தொடர்ந்து கிடைக்க அதிமுகவை ஆதரிக்குமாறு வெளிப்படையாக பிரச்சாரமும் நடைபெறுகிறது.

Image result for திமுக, அமமுக

இத்தொகுதியில் அரசின் உதவிகள் பெற்ற ஒரு லட்சம் குடும்பங்கள் உள்ளதாக கணக்கெடுத்துள்ளனர். இடைத்தேர்தல் அறிவிப்பு வரும்வரை அரசு செலவிலேயே பிரச்சாரம் செய்ய அதிமுக திட்டமிட்டுள்ளதால் திமுக, அமுமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்