எப்பா செம.! ரூ.8 கோடி விலையில் ஆடம்பர ஸ்போர்ட் வெர்சன் கார்.! பிரபல நிறுவனம் இந்தியாவில் அறிமுகம்.!
- ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கலினன் பிளாக் பேட்ஜ் வெர்ஷன் கார் இந்திய சந்தையில் வெளியிடப்பட்டது. ரோல்ஸ் ராய்ஸ் கலினன் பிளாக் பேட்ஜ் மாடலின் துவக்க விலை ரூ. 8.20 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- இது ரோல்ஸ் ராய்ஸ் ஸ்டான்டர்டு மாடலில் உள்ள என்ஜினை விட 29 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 50 என்.எம். டார்க் அதிகம் என கூறப்படுகிறது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கலினன் பிளாக் பேட்ஜ் வெர்ஷன் கார் இந்திய சந்தையில் வெளியிடப்பட்டது. ரோல்ஸ் ராய்ஸ் கலினன் பிளாக் பேட்ஜ் மாடலின் துவக்க விலை ரூ. 8.20 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ரோல்ஸ் ராய்ஸ் கலினன் பிளாக் பேட்ஜ் வெர்ஷன் ஆடம்பர ஸ்டான்டர்டு எஸ்.யு.வி. மாடலின் ஸ்போர்ட் வெர்ஷன் என தெரிவிக்கப்படுகிறது.
புதிய பிளாக் பேட்ஜ் எடிஷனில் பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் புதிய பிளாக் பெயின்ட், பிளாக்டு அவுட் எக்சாஸ்ட் பைப்கள், புதிய 22 இன்ச் ஃபோர்ஜ் செய்யப்பட்ட அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் கலினன் பிளாக் பேட்ஜ் மாடலில் 6.75 லிட்டர் ட்வின் டர்போ வி12 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 600 பி.ஹெச்.பி. பவர், 900 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது ஸ்டான்டர்டு மாடலில் உள்ள என்ஜினை விட 29 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 50 என்.எம். டார்க் அதிகம் ஆகும். ரோல்ஸ் ராய்ஸ் பிராண்டின் முதல் எஸ்.யு.வி. மாடலாக கனினன் அறிமுகம் செய்யப்பட்டது.
சர்வதேச சந்தையில் கலினன் மாடல் 2018-ம் ஆண்டு மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் கலினன் மாடல் 2018-ம் ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் கலினன் மாடலின் துவக்க விலை ரூ. 6.95 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.