இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் முதன்முறையாக நடித்துள்ள திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இப்படத்தில் ஹீரோயினாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். சசிகுமார் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இப்படம் உருவாகி இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் பட ரிலீஸ் ஆகாமல் தள்ளி போய்க்கொண்டே இருந்தது. அதிக கடன் பிரச்சினையால் படம் வெளியாகாமல் இருந்து வந்தது.
இந்த கடன் பிரச்சனைகளை கோமாளி பட தயாரிப்பாளர் ஓரளவு தீர்த்து உள்ளதாகவும், அதனை அடுத்து தான் எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் செப்டம்பர் 6-ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியானது என தகவல் வெளியானது. அதற்கடுத்ததாக இந்த படத்தின் விநியோகஸ்தர் ராஜராஜன் ஏற்கனவே பாகுபலி, சிந்துபாத் படங்களின் வெளியீட்டின் போது ஏற்பட்ட கடன் பாக்கி செலுத்தாமல் உள்ளார். என புது சிக்கல் எழுந்தது.
இதனை அடுத்து, மீண்டும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கு தடை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம். ராஜராஜனுக்கும் விநியோகிஸ்தர்களுக்கும் இடையில் ஒரு நபரை நியமித்து பிரச்சனைகளை தீர்க்க வழி வகுத்துள்ளது.
அதற்குள் இன்னொரு பிரச்சனையாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடைசியாக வெளியான அச்சம் என்பது மடமையடா திரைப்படம், செங்கல்பட்டு ஏரியாவில் நஷ்டம் என கூறி செங்கல்பட்டு ஏரியா விநியோகிஸ்தர்கள் ENPT படத்தை இன்னும் வாங்காமல் உள்ளனராம். அதற்கு நேற்று வரை பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதனால் தான் இன்னும் இப்படத்திற்கான பூக்கிங் பெரிய மால், தியேட்டர்களில் ஆரம்பமாகவில்லையாம். படம் நாளை வெளியாகுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனராம்.
அமெரிக்கா : அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று அமெரிக்காவின் அதிபரானார்.…
அரியலூர் : இன்று (நவம்பர் 6) புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…