தினமும் இந்த ஒரு லட்டு சாப்பிட்டால் போதும்…! விரும்பிய உடல் அழகு பெறலாம்!

தேவையான பொருட்கள்
- கொள்ளு
- கருப்பு உளுந்து
- வேர்க்கடலை
- எள்ளு
- வெல்லம்
- ஏலக்காய்
- நெய் அல்லது நல்லெண்ணெய்
செய்முறை
ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு கப் அளவுக்கு கொள்ளை சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு எடுத்து வைத்துள்ள கருப்பு உளுந்து சேர்த்து பொன்னிறமாக வரும்வரை நன்கு சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ளவும். பின் வேர்க்கடலை, எள், ஏலக்காய் மூன்றையும் ஒன்றாக வறுத்து தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின்பு கொள்ளு, கறுப்பு உளுந்து, வேர்க்கடலை, ஏலக்காய், எள் ஆகியவற்றை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவற்றை ஒரு கிண்ணத்தில் மாற்றி வைத்துக்கொண்டு, வெல்லத்தை பொடி செய்து இதனுடன் சேர்த்து நெய் அல்லது நல்லெண்ணெய் கையில் தடவி சிறு சிறு உருண்டைகளாக பிடித்து ஈரமில்லாமல் உள்ள ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக்கொள்ளவும். இதனை 10 நாட்கள் வரை . அதன்பின்பு கெட்டு விடும். எனவே 10 நாட்களுக்கு தேவையான அளவு லட்டு செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த லட்டை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் நிச்சயம் உங்களது உடலிலும் முடியிலும் நல்ல மாற்றத்தை உணர முடியும் ஒரு முறை செய்து பாருங்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அன்னைக்கே தெரியும்..சிவகார்த்திகேயன் வளர்ச்சி குறித்து ஷாம் என்ன சொன்னார் தெரியுமா?
February 25, 2025
ரொம்ப மோசமான பார்ம்…இந்தியாவின் B டீமை கூட பாகிஸ்தான் தொட முடியாது..சுனில் கவாஸ்கர் பேச்சு!
February 25, 2025
இந்தி எது ஆங்கிலம் எது ? விமர்சனம் செய்த அண்ணாமலை!
February 25, 2025