#BigBreaking : இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் ராஜினாமா.!
இங்கிலாந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் லிஸ் டிரஸ்
இங்கிலாந்து பிரதமராக பதவி வகித்து வந்த போரிஸ் ஜான்சன் மீது தனது கட்சி உறுப்பினர்களே எதிராக இருந்த நிலையில் அவர் ராஜினாமா செய்தார். அதன் பின்னர் தான் தேர்தல் நடைபெற்று லிஸ் டிரஸ் பிரதமராக கடந்த 6வாரங்களுக்கு முன்னர் பதவியேற்றார்.
அதன் பின்னர் அண்மையில் மினி பட்ஜெட் ஒன்றை தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட் தாக்கல் தோல்வியில் முடிந்ததால் அது பூதாகரமான பிரச்சனையாக உருவெடுத்தது. இதனை அடுத்து தான் இங்கிலாந்து அரசவையில் பல்வேறு அரசியல் நகர்வுகள் ஏற்பட்டன.
மினி பட்ஜெட் தோல்வி காரணமாக இங்கிலாந்து கவாசி கவார்தெங் அமைச்சரவையில் நீக்கப்பட்டு ஜெர்மி ஹண்ட் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகு அண்மையில், உள்துறை அமைச்சர் சுவெல்லா பிரெவர்மென் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனை தொடர்ந்து, இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற லிஸ் டிரஸ் பதவி விலக வேண்டும் என ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியினரே போர்க்கொடி தூக்கினர். இதனை தொடர்ந்து தான் லிஸ் டிரஸ் தற்போது தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.