ஜோ ரூட் அதிரடி ! 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி!
உலகக்கோப்பை திருவிழா இங்கிலாந்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் இங்கிலாந்தும், மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவு அணியின் தொடக்க வீரர்களாக எவின் லீவிஸ் ,கிறிஸ் கெய்ல் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே எவின் லீவிஸ் 2 ரன்னில் வெளியேறினார்.
பின்னர் ஷாய் ஹோப் களமிறங்கிய சிறிது நேரத்திலே கிறிஸ் கெய்ல் 36 ரன்கள் அடித்து வெளியேறினர். கிறிஸ் கெய்ல் வெளியேறிய அடுத்த இரண்டு பந்தில் ஷாய் ஹோப் 11 ரன்னில் அவுட் ஆனார்.
பின்னர் மேற்கிந்திய தீவு அணியில் நிதானமாக விளையாடிய நிக்கோலஸ் பூரன்,
சிம்ரன் ஹெட்மியர் இருவரின் கூட்டணியில் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது. இறுதியாக 44.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களை இழந்தது 212 ரன்கள் எடுத்தது.
மேற்கிந்திய தீவு அணியில் அதிகபட்சமாக நிகோலஸ் பூரன் மட்டும் 63 ரன்கள் குவித்தார்.இங்கிலாந்து அணி 3 விக்கெட்டையும் , ரூட் 2 விக்கெட்டையும் பறித்தனர். 213 ரன்கள் இலக்குடன் இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட் களமிறங்கினர்.
இருவரின் அதிரடி கூட்டணியில் அணியின் எண்னிக்கை உயர்ந்தது.மேலும் இங்கிலாந்து அணி தங்களது முதல் விக்கெட்டை 95 ரன்கள் இருக்கும் போது ஜானி பேர்ஸ்டோவ் 45 ரன்கள் உடன் வெளியேறினர்.
பின்னர் களமிறங்கிய கிறிஸ் வோக்ஸ் களமிறங்க ஜோ ரூட் உடன் இணைத்து அதிரடியாக விளையாடினர்.இப்போட்டியில் ஜோ ரூட் தனது சதத்தை நிறைவு செய்தார்.இறுதியாக இங்கிலாந்து அணி 33.1 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.