பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் அதிக ரன்கள் அடித்த பட்டியலில் இங்கிலாந்து முதலிடம்
நேற்று நடந்து முடிந்த போட்டியில் இங்கிலாந்து , பங்களாதேஷ் விளையாடியது. போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் முதலில் பந்து வீசியது. களமிறங்கிய இங்கிலாந்து 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 386 ரன்கள் எடுத்தது.
பிறகு களமிறங்கிய பங்களாதேஷ் 48.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் 280 ரன்கள் எடுத்து பங்களாதேஷ் அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்நிலையில் இதுவரை ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணியுடன் விளையாடிய அணிகளில் அதிக ரன்கள் அடித்த அணியில் இங்கிலாந்து அணி முதல் இடத்தை பிடித்து உள்ளது.
நேற்றைய போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 386 ரன்கள் குவித்தது.இதற்கு முன் 2005-ம் ஆண்டு இங்கிலாந்து அணி 391 ரன்கள் குவித்தது.இதன் மூலம் பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் அடித்த பட்டியலில் இங்கிலாந்து முதல் இரண்டு இடத்தை பிடித்து உள்ளது.
391/4 Eng Nottingham 2005
386/6 Eng Cardiff 2019
385/7 Pak Dambulla 2010
370/4 Ind Mirpur 2011