இந்தியாவில் சிக்கி தவிக்கும் 3000 பேரை மீட்க 12 விமானங்கள் வருகை.!
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருப்பதால், உலகம்முழுக்க பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொது போக்குவரத்துகள் முடக்கப்பட்டுள்ளன. அந்தந்த நாடுகளும் தங்கள் நாட்டு எல்லையை மூடியுள்ளன.
இதனால் பல்வேறு நாடுகளில் வேறு நாட்டை சேர்ந்தவர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இவ்வாறு, இந்தியாவில் 3000 இங்கிலாந்து நாட்டவர்கள் சிக்கியுள்ளனர்.
இவர்களை மீட்க இங்கிலாந்து அரசு 12 விமானங்களை இந்தியாவிற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இந்த விமானங்கள் மூலம், பஞ்சாப், குஜராத், மேற்கு வங்கம் மற்றும் தென் இந்தியாவில் உள்ள இங்கிலாந்து நாட்டவரை மீட்க உள்ளதாக அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் காரிக் அகமது தெரிவித்தார்.
ஏற்கனவே, 7 விமானங்கள் மூலம் கோவா, மும்பை, டெல்லியில் இருந்து 2000 இங்கிலாந்து நாட்டவரை சென்ற வாரம் இங்கிலாந்து அழைத்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.