1961 முதல் முறை, 1983 ஆம் ஆண்டு இரண்டாம் முறை, 1997ஆம் ஆண்டு கடைசி முறை என மொத்தமாக 3 முறை இந்தியாவுக்கு பயணம் செய்துள்ளார் மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத்.
நேற்று இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96வது வயதில் காலமானார். இவர் இறப்புக்கு பல நாட்டு தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இங்கிலாந்தில் 10 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட உள்ளது.
மறைந்த எலிசபத் ராணி இந்தியாவுக்கு சுதந்திரத்திற்கு பின்னர் 3 முறை வந்துள்ளார். முதலில், தனது கணவர் பிலிப்புடன் இணைந்து 1961ஆம் ஆண்டு இந்தியா வந்தார். அப்போது மஹாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். தாஜ்மஹால் சென்றுள்ளார், மும்பை, ஜெய்ப்பூர், கொல்கத்தா, சென்னை என முக்கிய இடத்திற்கு சென்றுள்ளார்.
தனது கணவர் உடன் இந்திய சுதந்திர தின விழாவில் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார். பெருந்தலைவர் காமராஜரையும் அந்த பயணத்தின் பொது எலிசபத் ராணி சந்தித்துள்ளார்.
இரண்டவது முறையாக, 1983ஆம் ஆண்டு இந்தியா வந்துள்ளார் எலிசபெத் ராணி. அப்போது பிரதமர் இந்திரா காந்தியுடன் சந்திப்பு, மேலும், டெல்லியில் அன்னை தெரேசா ஆகியோரை சந்தித்து விட்டு சென்றுள்ளார் ராணி எலிசபெத்.
மூன்றாவது முறையாக, 1997ஆம் ஆண்டு, இந்தியாவின் 50வது சுதந்திர தின விழாவில் ராணி எலிசபெத் கலந்து கொண்டார். அப்போது, அமர்தார்ஸில் உள்ள ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் சென்னை வந்த ராணி எலிசபெத், கமல்ஹாசனின் கனவு படமான மருதநாயகம் பட துவக்க விழாவில் கலந்துகொண்டார். அந்த விழா சென்னை எம்ஜிஆர் பிலிம் சிட்டியில் நடைபெற்றது . அங்கு அப்போதைய முதல்வர் மறைந்த கலைஞர் கருணாநிதி, சிவாஜி கணேசன் , கமல்ஹாசன் ஆகியோரை சந்தித்தார். அதுதான் எலிசபத் ராணியின் கடைசி வருகையாகும்.
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…
டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…
சென்னை : அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…