கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இங்கிலாந்து இளவரசி..!
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டார் இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டன்.
உலகம் முழுவதும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது. இதிலிருந்து தப்பிக்க அனைவரும் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் இங்கிலாந்து நாட்டில் தற்போது தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக 30 வயதிற்கு அதிகமானவர்க்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது இங்கிலாந்து அரசு.
அதன்படி, இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டன் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார். இவர் இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி. இவருக்கு 39 வயது ஆகிறது. லண்டன் அறிவியல் அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி முகாமில் இவர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்டுள்ளார்.
இந்த தகவலை அவரது ட்விட்டர் பக்கத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட புகைப்படத்துடன் வைத்துள்ளார். மேலும், தடுப்பூசி போடும் பணியில் ஈடுப்பட்டுள்ள அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். கடந்த வாரம் இங்கிலாந்து இளவரசர் வில்லியம்(38) கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Yesterday I received my first dose of the COVID-19 vaccine at London’s Science Museum. I’m hugely grateful to everyone who is playing a part in the rollout – thank you for everything you are doing. pic.twitter.com/h427iT0n4x
— The Duke and Duchess of Cambridge (@KensingtonRoyal) May 29, 2021