விரைவில் துரித உணவுகளுக்கு தடையா.?! இங்கிலாந்து பிரதமரின் அதிரடி திட்டம்.!
பிரதமர் போரிஸ் ஜான்சன் இங்கிலாந்தில், விரைவில் துரித உணவுகளுக்கு தடை விதிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கூட கொரோனா தொற்று ஏற்பட்டது. பின்னர் அவர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் போது, சில நோயாளிகள் துரித உணவுகளை (Junk foods) சாப்பிட்டு, உடல் பருமனாகி இருப்பதால் மூச்சுவிட சிரமபடுவதால் சிகிச்சையளிக்க சிரமமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக பிரதமர் போரிஸ் ஜான்சன் இங்கிலாந்தில், விரைவில் துரித உணவுகளுக்கு தடை விதிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தடை விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.