ஆஸ்திரேலியாவிடம் சொந்த மண்ணில் மண்டியிட்ட இங்கிலாந்து !
இன்றைய போட்டியில் இங்கிலாந்து , ஆஸ்திரேலியா அணிகள் மோதியது . இப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச முடிவு செய்தது.
ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரர்களான வார்னர் ,பின்ச் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து வழக்கம் போல அதிரடியாக விளையாடிய இருவரும் அணியின் ரன்களை சேர்ந்தனர்.
இவர்களின் கூட்டணியை பிரிக்க முடியாமல் இங்கிலாந்து அணி 22 ஓவர் தினறியது. அந்நிலையில் தொடக்க வீரரான வார்னர் 53 ரன்கள் எடுத்து 23-வது ஓவரில் வெளியேறினர். பிறகு இறங்கிய உஸ்மான் கவாஜா 29 பந்திற்கு 23 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
நிதானமாகவும் ,அதிரடியாகவும் விளையாடிய தொடக்க வீரரான பின்ச் சதம் அடித்து வெளியேறினர்.இறுதியாக ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 285 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி பந்து வீச்சில் கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டையும் , ஜோஃப்ரா ஆர்ச்சர் , மார்க் வூட் ,பென் ஸ்டோக்ஸ் , மொயீன் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் பறித்தனர்.
286 ரன்கள் இலக்குடன் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரரான ஜேம்ஸ் வின்ஸ் , ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய இரண்டு பந்தியிலே ஜேம்ஸ் வின்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
அதன் பிறகு களமிறங்கிய ஜோ ரூட் 8 , மோர்கன் 4 ரன்களில் இருவரும் வெளியேறிய அதன் பென் ஸ்டோக்ஸ் , ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் நிதானமாக விளையாடிய அணியின் ரன்களை சற்று உயர்த்தினர்.
ஆனால் 14-வது ஓவரில் ஜானி பேர்ஸ்டோவ் 27 ரன்களுடன் வெளியேறினார்.இங்கிலாந்து அணியில் நிதானமாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 89 ரன்கள் குவித்தார். அதன் பின்னர் களமிறங்கிய ஜோஸ் பட்லர் 25, கிறிஸ் வோக்ஸ் 26 ,மொயீன் அலி 6 ரன்களில் வெளியேறினர்.
இறுதியாக இங்கிலாந்து அணி 44.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்து 221 ரன்கள் அடித்து 64 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சில் ஜேசன் 5 விக்கெட்டையும் , ஸ்டார்க் 3 விக்கெட்டையும் பறித்தனர்.