இங்கிலாந்தில் பெயிண்ட் தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து!
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஸ்டெபல் கார்நேர் என்ற குடியிருப்பு பகுதிக்கு அருகே இயங்கி வரும் பெயிண்ட் தொழிற்சாலையில் நள்ளிரவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தீ கொளுந்துவிட்டு எரிந்ததால், அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளுக்கு புகைபரவியது.
தீவிபத்தில் பெயிண்ட் ஆலை கட்டிடம் முழுவதும் சேதமடைந்த நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து, தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இரவு நேரத்தில் ஏற்பட்ட தீவிபத்து என்பதால், யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.