பிரிட்டன் பொதுத்தேர்தல் ஒரு பார்வை! பழமைவாத கட்சி vs தொழிலாளர் கட்சி!

Default Image
  • இங்கிலாந்து நேரப்படி காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இன்று தேர்தல் நடைபெற உள்ளது. 
  • பழமைவாத கட்சி சார்பாக போரிஸ் ஜான்சனும், தொழிலார்கள் கட்சி சார்பாக ஜெரிமி கோர்பினிஸும் போட்டி போடுகின்றனர்.

பிரிட்டனில் இன்று பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. நம் நாட்டில் உள்ளது போல அங்கும் இரு அவைகள் உண்டு ஒன்று மக்களவை அதாவது House of commons மற்றும் இன்னொன்று பிரபுக்கள் அவை அதாவது House of Lords என இரு அவைகளை கொண்டது.

இதில் மக்கலவையை மட்டும் மக்கள் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்கள் மூலம் பிரதமர் தேர்தெடுக்கப்படுகின்றனர். பிரதமரை பிரிட்டன் ராணி நியமிக்கிறார். பிரபுக்கள் அவைக்கான உறுப்பினர்களை பிரதமரின் ஆலோசனைபடி ராணி நியமிக்கிறார்.

பிரிட்டனில் மொத்தம் 650 மக்களவை உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 325 பேரின் ஆதரவு இருந்தால் போதும் ஆட்சியமைக்க. பிரிட்டனில் மொத்தம் 4.57 கோடி வாக்காளர்கள் உள்ளார். 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் வாக்களிக்க முடியும். காலை 7 மணி முதல் இரவு 10 வாக்குப்பதிவு நடைபெற்று அதன் பின்னர் உடனே வாக்கு எண்னிக்கை நடைபெற்று ரிசல்ட் அறிவிக்கப்படும்.

இதில் பிரிட்டன் பழமைவாத கட்சி (வலது சாரி) சார்பாக போரிஸ் ஜான்சனும், தொழிலார்கள் கட்சி ( இடது சாரி )சார்பாக ஜெரிமி கோர்பினிஸும் எதிரெதிரே போட்டியிடுகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்