இணையத்தில் வைரலாகும் பிக்பாஸ் தர்சனின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்!
- இணையத்தில் வைரலாகும் பிக்பாஸ் தர்சனின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்.
- தர்சன் – சனம் செட்டி காதலுக்கு இடையே விரிசலா?
கடந்த ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் தர்சன் போட்டியாளராக கலந்து கொண்டு, அந்த போட்டியில் வெற்றி பெறவில்லை என்றாலும், பல கோடி மக்களின் மனதை வென்றுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த நிகழ்ச்சியின் போதே தர்சன், நடிகை சனம் ஷெட்டியை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவு பெற்ற பின்னர் இவர்கள் காதலுக்கு இடையே முறிவு ஏற்பட்டதாகவும் பேசப்பட்டது.
இந்நிலையில், நடிகை சனம் செட்டி சென்னை காவல்நிலையத்தில், தர்சன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக கூறியுள்ளார். மேலும், தர்சனுக்கும், அவருக்கும் கடந்த வருடம் மே மாதம் நிச்சயம் நடைபெற்றதாகவும், ஜூன் மாதம் திருமணம் நடக்கவிருந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்வதால், திருமணத்தை தள்ளி வைத்ததாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், தர்சன் மற்றும் சனம் செட்டியின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணைய பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,