இங்கிலாந்து நீதிமன்றம் தொழிலதிபர் விஜய்மல்லயாவிற்கு உத்தரவு !
இங்கிலாந்து நீதிமன்றம் சிங்கப்பூரைச் சேர்ந்த விமான நிறுவனத்திற்கு சுமார் 578 கோடி ரூபாயை செலுத்த தொழிலதிபர் விஜய்மல்லயாவிற்கு உத்தரவிட்டுள்ளது.
சிங்கப்பூரைச் சேர்ந்த பி.ஓ.சி. ஏவியேஷன் என்ற நிறுவனம் கிங்பிஷருடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி 3 விமானங்களை குத்தகைக்கு வழங்கியுள்ளது. ஆனால் இந்த விமானங்களுக்கு தருவதாக ஒப்புக் கொண்ட தொகையை கிங் பிஷர் நிறுவனம் வழங்கவில்லை. கிங்பிஷர் நிறுவனம் டெபாசிட்டாக வழங்கியதும் சிறு தொகைதான் என்பதால் விமானங்களுக்கான தொகையை கேட்டு லண்டன் நீதிமன்றத்தில் பி.ஓ.சி ஏவியேஷன் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் தீர்ப்பளித்த இங்கிலாந்து உயர் நீதிமன்றம், பணத்தை தரமறுப்பதற்கான எந்த முகாந்திரமும் மல்லையா தரப்பிற்கு இல்லை என்பதால் வட்டியுடன் சேர்த்து 90 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் 578 கோடி ரூபாய் பணத்தை மல்லயாவின் கிங்பிஷர் மற்றும் யுனைட்டட் ப்ரீவரீஸ் நிறுவனங்கள் வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்திய பொதுத்துறை வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடனை திரும்ப செலுத்தாத தொழிலதிபர் விஜய் மல்லயா தற்போது லண்டனில் பதுங்கியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.