ஊழியர்கள் டிக்டாக் செயலியை நீக்க வேண்டும் – அமேசான் அதிரடி.!

லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவ வீரர்கள் இடையில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து எல்லையில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக இரு நாட்டு ராணுவப் படைகளும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதி அருகே தங்கள் பபடைகளை குவித்தனர்.
இந்த தாக்குதல் எதிரொலியாக சமூகவலைதளங்களில் இந்தியர்கள் சீனாவிற்கு எதிராக கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும், சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் போன்ற குரல்கள் மேலோங்கின. இதையடுத்து டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை என மத்திய அரசு அறிவித்துள்ளது. சமீபத்தில், இந்திய இராணுவ வீரர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் டிக்டாக் உள்ளிட்ட 89 செயலிகளை பயன்படுத்த கூடாது என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது அமேசான் நிறுவனம் தங்கள் ஊழியர்கள் டிக்டாக் செயலியை ஸ்மார்ட்போன்களில் இருந்து நீக்க வேண்டும் என கூறியுள்ளது. பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக ஊழியர்களுக்கு வலியுறுத்தியதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள இ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்கள் இணையதளத்தில் விற்கப்படும் பொருட்கள் எந்த நாட்டில் தயாரிக்கப்படுகிறது (Country of origin) என்பது குறித்து தெரிவிக்கவேண்டும். இந்த விதியை ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் பின்பற்றுமாறு வர்த்தக அமைச்சகம் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025