மீண்டும் பிரான்ஸ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட இம்மானுவேல் மக்ரோன் …!

Default Image

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் நடைபெற்ற தேர்தலில்  44 வயதான இமானுவேல் மக்ரோன் மீண்டும் பிரான்ஸ் அதிபராக 58 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது அவரது எதிர்க்கட்சியான தீவிர இடதுசாரி காட்சியாய் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார்.

தற்பொழுது 58 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இரண்டாவது முறையாக பிரான்சில் அதிபராக முன்றாவது ஜனாதிபதி எனும் பெருமையை இவர் பெற்றுள்ளார். நாளை இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது. நாளைய தினத்தில் இம்மானுவேல் தான் பதவியேற்பதற்க்கான நாளையும் நிர்ணயித்து கூறுவார் என சொல்லப்படுகிறது.

இருப்பினும், வாக்கு வித்தியாசம் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே வருகிற ஜூன் மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இம்மானுவேல் பெரும்பான்மையயை இழப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால் வாக்காளர்களின் பெரும்பகுதியினர் இம்மானுவேலை விரும்பவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக ஒரு கருத்துக்கணிப்பில் 63% வாக்காளர்கள் இமானுவேல் மக்ரோனை விரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதால் பிரான்ஸ் அதிபராக இமானுவேல் தொடர்வதற்கான வாய்ப்புகள் குறைவு என சொல்லப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்