அமெரிக்காவில் அவசர நிலை…அதிபர் டிரம்ப் பேட்டி…!!
அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தடுப்பு சுவர் கட்டியே தீருவேன்என்று என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்து வந்தார்.இந்நிலையில் எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு காரணமாக அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்டும் நிதி மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை.இதையடுத்து அமெரிக்காவில் 20 நாட்களாக அரசு துறைகள் முடங்கியுள்ளன
அரசின் பணிகள் முடங்கியத்தையடுத்து வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் ஜனநாயக கட்சி பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.இதையடுத்து அதிபர் ட்ரம்பிடம் “எல்லையில் சுவர் கட்டுவதற்காக அவசரநிலை அறிவிக்கும் திட்டம் ஏதும் உள்ளதா?” என்று நிருபர்கள் கேள்வி கேட்டதற்கு டிரம்ப், அவசரநிலையை கொண்டு வருவது பற்றி ஆலோசித்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.