இறந்த வாக்காளர்கள் பெயரில் அமெரிக்க அதிபர் தேர்தலில் மின்னஞ்சல் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வாரத்தில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்று கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தான் முடிவடைந்தது. இந்த தேர்தலில் ஜோ பைடன் அவர்கள் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் அமெரிக்க அதிபராக இதுவரை பதவி வகித்து வந்த அதிபர் டிரம்ப் அவர்கள் தோல்வி அடைந்துள்ளார். இருப்பினும் தனது தோல்வியை ஒப்புக் கொள்ளாததால் நீதிமன்றத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு இந்த வழக்கும் நிலுவையில் உள்ள நிலையில், ஜார்ஜியா மாகாணத்தில் வாக்குகள் முழுமையாக எண்ணப்படாததால் அதிபர் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை. இருப்பினும், ஜோ பைடன் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் வருகிற டிசம்பர் 14ம் தேதிக்கு உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் மின்னஞ்சல் மூலமாக போடப்பட்ட வாக்குகளில் முறைகேடு நடந்திருப்பதாக டிரம்ப் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. அதனை உறுதி செய்யும் விதமாக தற்பொழுது இறந்த வாக்காளர்களின் பெயரிலும் மின்னஞ்சல் மூலமாக வாக்குகள் போடப்பட்டிருப்பது தற்பொழுது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஜோ பைடன் ஆதரவாளர்களால் செய்யப்பட்டதா என்பது குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. இதனால் தற்பொழுது உண்மை யார் பக்கம் உள்ளது என்பது தெரியாமல் மக்களும் அரசியல்வாதிகளும் குழப்பத்தில் இருக்கின்றனர். விரைவில் இது குறித்த முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்ப்போம்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…