டெஸ்லா (Tesla) நிறுவனம்,இந்தியாவில்,தனது நான்கு கார் மாடல்களுக்கு இந்தியாவின் சோதனை நிறுவனங்களிடமிருந்து ஒப்புதல் பெற்றுள்ளது.
இந்தியாவில்,பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்டவற்றின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதனால்,பெரும்பாலான மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், எலக்ட்ரிக் வாகனம் மற்றும் கார் தயாரிப்புகளில் உலகளவில் முன்னிலையில் உள்ள நிறுவனமான எலான் மஸ்கின் டெஸ்லா (Tesla) நிறுவனம் இந்தியாவில் தனது விற்பனையை துவங்க திட்டமிட்டு ,இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் தனது கார்கள் மீதான இறக்குமதி வரியை 40% ஆக குறைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது,ஆனால்,மத்திய அரசு இதனை நிராகரித்தது.
இந்நிலையில்,டெஸ்லா (Tesla) நிறுவனம்,இந்தியாவில்,தனது நான்கு எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கு ஹோமோலேஷன் (homologation) நிலையிலான நிபந்தனைகளை பூர்த்தி செய்து இந்தியாவின் சோதனை நிறுவனங்களிடமிருந்து ஒப்புதலை பெற்றுள்ளது. ஹோமோலோகேஷன் என்பது இந்திய சாலைகளில் வாகனத்தை ஓட்ட தேவையான அனைத்து அளவுகோல்களையும் பூர்த்தி செய்துள்ளது என்பது பொருளாகும்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வாகன் சேவா, டெஸ்லா இந்தியா மோட்டார்ஸ் மற்றும் எனர்ஜி ஆகியவற்றிலிருந்து வெளியிடப்பட்ட விவரங்களின்படி, டெஸ்லாவின் இந்திய துணை நிறுவனம் அதன் நான்கு மாடல் வாகனங்களுக்கும் ஒப்புதல்களைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
எனினும்,அதன் மாடல்களின் குறிப்பிட்ட விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.ஆனால் டெஸ்லாவின் பல சோதனை கார்கள் இந்திய சாலைகளில் காணப்படுகின்றன.குறிப்பாக, மாடல் 3 மற்றும் மாடல் ஒய் கடந்த பல வாரங்களாக இந்தியாவில் சோதனைகளில் உள்ளன.
இதற்கிடையில்,இந்தியாவில் டெஸ்லா கார்களுக்கான இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், விண்டு ஷீல்டு, கியர், பிரேக் மற்றும் பவர் சீட்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக், எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் உதிரி பாகங்களைத் தயாரிக்க,சோனா காம்ஸ்டார், சன்தார் டெக்னாலஜிஸ் மற்றும் பார்த் போர்ஜ் ஆகிய 3 நிறுவனங்களிடம் டெஸ்லா முக்கியமான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.எனவே,இந்நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.இதனால்,இவைகளில் முதலீடு செய்தவர்களுக்கு ஜாக்பாட்தான் என்று தகவல் தெரிவிக்கின்றன.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…