#ViralTweet: எலான் மஸ்க் கொடுத்த அதிர்ச்சி.. யூடியூபருக்கு கிடைத்த வாய்ப்பு..
ட்விட்டரை நான் வைத்துக்கொள்ளலாமா? என்று யூடியூபர் எழுப்பிய கேள்விக்கு எலான் மஸ்க்கின் பதில்.
உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார் லிங்க் உள்ளிட்ட நிறுவனங்களின் நிறுவனருமான எலான் மஸ்க், சமீபத்தில் ட்விட்டரையும் தன் வசமாக்கி கொண்டார். அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு பகுதி பங்குகளை வாங்கியதை அடுத்து, டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைபற்றி விடுவார் என கூறப்பட்டது. அதன்படி, ட்விட்டரை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்கினார்.
இதனிடையே, ட்விட்டரில் நிறைய மாற்றங்களை கொண்டு வரப்போவதாக கூறி வரும் எலான் மஸ்க், தினமும் ஒரு ட்வீட்ட்டை பதிவிட்டு வருகிறார். அதில், குறிப்பாக மெக் டொனால்ட்டை வாங்க போகிறேன், கோக கோலாவில் கோகைனை கலக்க போகிறேன் என்றெல்லாம் ட்வீட் போட்டிருந்தார். இது அவ்வப்போது வைரலாகி ஒரு பக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
அந்த வகையில் சமீபத்தில் எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் பதிவை பதிவிட்டுள்ளார். அதில், நான் மர்மமான முறையில் இறந்துவிட்டால், அதற்கான காரணத்தை நீங்கள் தெரிந்து கொண்டால் மகிழ்ச்சி என குறிப்பிட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எதற்காக எலான் மஸ்க் இப்படி ஒரு ட்வீட்டை போட்டுள்ளார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
If I die under mysterious circumstances, it’s been nice knowin ya
— Elon Musk (@elonmusk) May 9, 2022
இவரது இந்த ட்வீட் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்றாலும், பலர் மஸ்குக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். இன்னும் சிலர் கிண்டல் செய்து வருகிறார்கள். அந்த வகையில் எலான் மஸ்க்கின் ட்விட்டை பார்த்த அமெரிக்காவின் பிரபல யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட், மாயாண்டி குடும்பத்தார் படத்தில் வரும் காமெடி போல “எப்பா நீ செத்து போய்ட்டா இந்த ரெண்டு செருப்பும் எனக்கு தானப்பா” என்பது போல, அப்படி எதாவது நடந்தால் ட்விட்டரை நான் வைத்துக்கொள்ளலாமா? என்ற கேள்விக்கு, fun-ஆக சரி என எலான் மஸ்க் கூறியுள்ளது வைரலாகி வருகிறது.
நான் மர்மமான முறையில் இறந்தால், அதற்கான காரணத்தை நீங்கள் அறிந்துகொண்டால் மகிழ்ச்சி என இந்த ட்வீட்டை போடுவதற்கு முன்னர் ரஷ்ய மொழியில் அந்த நாட்டு அதிகாரி ஒருவரின் உரையாடலை எலான் மஸ்க் ட்வீட்டில் பகிர்ந்திருந்தார். அதில் உக்ரைனின் சர்வாதிகாரி படைகளுக்கு ராணுவ தொலைத்தொடர்பு கருவிகளை எலான் மஸ்க் அளித்து வருகிறார். நீங்கள் என்ன தான் முட்டாள்தனமாக நடந்து கொண்டாலும் நீங்கள்தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. உக்ரைனுக்கு எலான் மஸ்க் உதவி செய்து வருவதால் ரஷ்ய படைகளால் அவருக்கு மிரட்டல் விடுத்திருக்கப்பட்டிருக்கலாம் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.