அவர் மோசமான கலைஞன்… வம்பிழுத்த டிரம்ப்… சரியான பதிலடி கொடுத்த எலான் மஸ்க்…
‘எலான் மஸ்க் ஒரு மோசமான கலைஞன்’ – டொனால்ட் டிரம்ப். ‘அவரை நான் வெறுக்கவில்லை. ட்ரம்ப் தற்போது மணல் காற்றில் நடந்து ஓய்வெடுக்கும் தருணம்.’ – எலான் மஸ்க்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அவ்வப்போது யாரிடமாவது வம்பிழுத்து வாங்கி கட்டிக்கொள்வதை வழக்காமாகவே வைத்துள்ளார். பல்வேறு இடங்களில் இதனை செய்துள்ளார்.
அண்மையில் இவர் பேசிய ஒரு வீடியோ வைரலானது, அதில் இவர் பேசுகையில், டெஸ்லா நிறுவன சி.இ.ஓ எலான் மஸ்க்கை, அவர் மற்றுமொரு மோசமான கலைஞன் என வசைபாடியுள்ளார்.
இதனை பார்த்த எலான் மஸ்க், ‘ அவரை நான் வெறுக்கவில்லை. ட்ரம்ப் தற்போது மணல் காற்றில் நடந்து ஓய்வெடுக்கும் தருணம். (ட்ரம்பின் வயதை குறித்து). ட்ரம்ப் இதனை நிறுத்தி கொள்ள வேண்டும். அவர் இந்த உலகத்தில் வாழ்வதற்கு அவருக்கு அமெரிக்க அதிபர் பதவி தேவைப்படுகிறது’ என சூப்பரான பதிலை கொடுத்து இருந்தார்.
Trump Rips Elon Musk: “Another Bullsh*t Artist” pic.twitter.com/kiuGp7xTEu
— Breitbart News (@BreitbartNews) July 11, 2022