அடேங்கப்பா ! 187 பில்லியன் டாலர்களுடன் உலகின் முதல் பணக்காரராக உருவெடுத்தார் எலோன் மஸ்க்
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் தலைமை நிர்வாக அதிகாரியான எலோன் மஸ்க் வியாழக்கிழமை அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸை பின்னுக்குத்தள்ளி 187 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகின் முதல் பணக்காரராக உருவெடுத்துள்ளார் என்று ப்ளூம்பெர்க் கூறியுள்ளது.
2017 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் உலகின் முதல் பணக்காரராக ஜெஃப் பெசோஸை இருந்து வந்தார்.கடந்த ஆண்டில், 49 வயதான மஸ்க்கின் நிகர மதிப்பு 150 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்ந்தது, கடந்த ஆண்டு மட்டும் டெஸ்லா பங்கு விலை 743% உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.