#Twitter:ட்விட்டர் CEO பராக் அகர்வால் மாற்றமா? – எலான் மஸ்க் முடிவு!

Default Image

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரின் மிகச் சிறந்த பயனர்களில் ஒருவரான உலக பணக்காரரான எலான் மஸ்க்,கடந்த ஜனவரி மாதத்தில் சுமார் 9% ட்விட்டர் பங்குகளைக் வாங்கியிருந்தார்.இதனைத்தொடர்ந்து, ட்விட்டரை கைப்பற்றுவதற்கு எலான் மஸ்க் தீவிர முயற்சி எடுத்து வந்த நிலையில், 44 பில்லியன் டாலர்கள்(3.36 லட்சம் கோடி) மதிப்பில் ட்விட்டரை ஏப்ரல் 25 அன்று கைப்பற்றினார்.

இதனையடுத்து,எலோன் மஸ்க் ட்விட்டரை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியதில் இருந்து,ட்விட்டர் ஊழியர்கள் தங்கள் வேலை பறிபோகுமோ என்று அச்சத்தில் உள்ளனர்.அதே சமயம்,கடந்த சில வாரங்களில்,ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வாலின் பணிநீக்கங்கள், ட்விட்டரின் எதிர்காலம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில்,ட்விட்டர் CEO அகர்வாலுக்குப் பதிலாக ட்விட்டருக்கான புதிய தலைமை நிர்வாகியை எலான் மஸ்க் ஏற்கனவே வரிசைப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.ஏனெனில்,கடந்த மாதம்,ட்விட்டரின் தலைவர் பிரட் டெய்லரிடம்,நிறுவனத்தின் நிர்வாகத்தில் தனக்கு நம்பிக்கை இல்லைஎனவும்,நிர்வாக மட்டத்தில் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் எனவும் எலான் மஸ்க் சுட்டிக்காட்டினார்.

முன்னதாக,ட்விட்டர் நிறுவனர் ஜாக் டோர்சிக்கு பதிலாக ஆறு மாதங்களுக்கு முன்பு,நவம்பர் 29, 2021 அன்றுதான் ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக பராக் அகர்வால் நியமிக்கப்பட்டார்.இதற்கு முன்னதாக அவர் நிறுவனத்தில் நீண்ட காலம் பொறியியலாளராக பணியாற்றியவர்,அதன்பின்னர்,தலைமை தொழில்நுட்ப அதிகாரி பதவிக்கு உயர்ந்திருந்தார்.இந்த சூழலில்,மஸ்க்கிற்கு நிறுவனத்தின் விற்பனை முடியும் வரை பராக் தனது பணியை ஆற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே,ட்விட்டரில் கட்டுப்பாட்டை மாற்றிய 12 மாதங்களுக்குள் அகர்வாலை நீக்கினால் மஸ்க் 43 மில்லியன் டாலர் செலுத்த வேண்டும் என்று முன்னதாக கூறப்பட்டது.

அதே சமயம்,ட்விட்டரின் சட்டத் தலைவர் விஜயா காடேவையும் பணிநீக்கம் செய்ய மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தி நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.அதன்படி,பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டால், ட்விட்டர் பங்குகள் உட்பட 12.5 மில்லியன் டாலர் மதிப்பிலான தொகையை  பெறுவார் என்று கூறப்படுகிறது.விஜயா காடே தற்போது ஆண்டுக்கு சுமார் 17 மில்லியன் டாலர் சம்பாதிக்கிறார் மற்றும் நிறுவனத்தில் அதிக ஊதியம் பெறும் நிர்வாகிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்