கார் வெளியீட்டு விழாவில் நடனமாடிய எலான் மஸ்க்..!
ஐரோப்பாவில் முதல் தொழிற்சாலையை துவங்கிய நிகழ்ச்சியில் எலான் மஸ்க் நடனமாடினார்.
எந்த மாதிரியான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகும் என்பது யாருக்கும் தெரியாது. பொதுவாக கொஞ்சம் வித்தியாசமான வீடியோக்கள் வைரலாகும். குறிப்பாக பிரபலங்கள் என்ன செய்தாலும் அடுத்த நாள் அது ட்ரெண்டிங்காகும்.
இந்நிலையில், தற்போது ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. உலகின் மிகப்பெரிய பணக்காரராக எலான் மஸ்க் நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது. விவாதங்கள், சர்ச்சை கருத்துகள் என எப்போதும் செய்திகளில் இருக்கும் எலான் மஸ்க், மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.
டெஸ்லா நிறுவனம் ஐரோப்பாவில் முதல் தொழிற்சாலையை ஜெர்மன் நாட்டின் தலைநகரான பெர்லின்-க்கு அருகில் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியுள்ளது. அப்போது எலான் மஸ்க் நடனமாடினார். அவர் நடனமாடுவதைப் பார்த்தவர்கள் கைதட்டி மேலும் உற்சாகமடைந்தனர். அப்போது வீடியோ எடுக்க வந்த ட்ரோன் கேமராவைப் பார்த்ததும் எலான் மஸ்க் மேலும் உற்சாகமடைந்து ட்ரோன் கேமராவுக்கு முன் நடனமாடினார்.
The best of Giga Berlin:
Elon’s dance moves $TSLA #Tesla @elonmusk #elon #ElonMusk pic.twitter.com/FYfPcYNiYR— Lupe (@Lup3Garza) March 22, 2022