ஸுக்கர்பேர்க்கை பின்னுக்கு தள்ளிய மஸ்க்.. உலக பணக்காரர் பட்டியலில் 3-ம் இடம்!
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பேர்க்கை பின்னுக்கு தள்ளி, உலக பணக்காரர் பட்டியலில் மூன்றாம் இடத்தை எலான் மஸ்க் பிடித்தார்.
டெஸ்லா, ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனங்களின் நிறுவனர், எலான் மஸ்க். இவரின் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள், தொடர்ந்து உயர்ந்துகொண்டே வந்தது. அந்தவகையில், ஒரே நாளில் அந்நிறுவனத்தின் பங்குகள், 11.7 பில்லியன் டாலராக உள்ளது. இதனால் அவரின் சொத்து மதிப்பு, 115.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
அதுமட்டுமின்றி, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பேர்க்கை பின்னுக்கு தள்ளி, உலக பணக்காரர் பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்தார். ஸுக்கர்பேர்க்கின் சொத்து மதிப்பு, தற்பொழுது 111 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
ப்ளூம்பெர்க் பில்லியனர்கனின் பட்டியலின்படி, 202 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஜெஃப் பெசோஸ் முதல் இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் இரண்டாம் இடத்தில் 125 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பில் கேட்ஸ், மூன்றாம் இடத்தில் 115 பில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் எலான் மஸ்க், நான்காம் இடத்தில் 111 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் மார்க் ஜுக்கர்பெர்க், அவரை தொடர்ந்து, 85.7 பில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் பெர்னார்ட் அர்னால்ட் ஐந்தாம் இடத்தில் உள்ளார்.