டிவிட்டரை சொன்னபடி வாங்க வேண்டும்.? எலான் மஸ்க்கிற்கு கடும் நெருக்கடி.!
பிரபல சமூக வலைதளமான டிவிட்டர்-ஐ உலக பணக்கார்களில் முதன்மையானவரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவருமான எலான் மஸ்க் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்குவதாக தகவல் வெளியாகின.
இதற்கான ஒப்பந்தமும் தயரானதாக கூறப்படுகிறது. ஆனால், எலான் மஸ்க் , ‘ போலி கணக்குகளையும், குறிப்பிட்ட சில விவரங்களையும் முழுதாக கொடுத்தால் மட்டுமே வாங்கப்படும்.’ என்பது போல கட்டுப்பாடுகள் விதிக்கவே, டிவிட்டர் நீதிமன்றத்தை நாடியது.
அங்கு, வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விசாரணையை அடுத்த வருடம் பிப்ரவரிக்கு தள்ளிவைக்க வேண்டும் என மஸ்க் தரப்பும், செப்டம்பரில் விரைவாக விசாரிக்க வேண்டும் என டிவிட்டர் இரு தரப்பும் வாதிட்டன.
இதில், இரு தரப்பையும் விசாரித்த நீதிபதி, அக்டோபர் மாதம் 5 நாள் இதன் விசாரணை நடைபெறும் என உத்தரவிட்டுள்ளார்.