ஜப்பானுக்குள் நுழைய இந்தியா உள்பட 11 நாடுகளுக்கு தடை!
கொரோனா அச்சத்தால் இந்தியாவையும் சேர்த்து 11 நாடுகளை தங்கள் நாட்டுக்குள் வர அனுமதி மறுத்துள்ள ஜப்பான்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் இன்னும் குறைந்த பாடில்லை. 50 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துவிட்டது. இந்நிலையில், அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் கூட கொரோனா அலை ஓயவில்லை.
இந்நிலையில், அதிகம் பாதிக்கப்பட்ட 10 நாடுகளில் 10 வது நாடக இந்தியா அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை கடந்துள்ளது. ஜப்பானுக்கும் தற்பொழுது விமான சேவை மற்றும் இயல்பு நிலை திரும்பிவருகிறது.
இருந்த போதிலும், தங்களது நாட்டுக்குள் இந்தியா உள்பட 11 நாடுகள் வர கூடாது என ஜப்பான் அரசாங்கம் தடை விதித்துள்ளது. இந்த பட்டியலில், ஆப்கானிஸ்தான், அர்ஜெண்டினா, வங்காளதேசம், எல் சால்வடார், கானா, கினியா, இந்தியா, கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய 11 நாடுகளும் சேர்க்கப்பட்டு உள்ளன.