தனது ஆசையை நிறைவேற்ற சர்க்கஸை விட்டு தப்பித்த குறும்புக்கார தம்பதி யானைகள்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • ரஷ்யாவில் உள்ள எக்டேரின்பெர்க் நகரில் உள்ள சர்க்கஸில் இருந்து கர்லா மற்றும் ரன்னி ( Karla and Ranni ) என்ற இரு யானைகள் தப்பித்துள்ளது.
  • அந்த இரு யானைகளும், சர்க்கஸை விட்டு வெளியேறி. அங்கு கிடைத்த உணவுகளை சாப்பிட்டு மகிழ்வாக சுற்றி திரிந்துள்ளது. பின்னர் சர்க்கஸ் ஊழியர்கள் கயிறு கட்டி, அந்த யானையை இழுத்துச் சென்றனர்.

ரஷ்யாவில் உள்ள எக்டேரின்பெர்க் நகரில் உள்ள சர்க்கஸில் அடைத்து வைக்கப்பட்டு மனிதர்களின் சொல் பேச்சு கேட்கும் படி வளர்க்கபட்ட வரும் கர்லா மற்றும் ரன்னி ( Karla and Ranni ) என்ற இரு யானைகள் குறும்புக்கார தம்பதி யானைகள் என்று சொல்லப்படுகிறது.
கர்லா மற்றும் ரன்னி வெளி உலகை சுற்றி பார்க்க நினைத்து சர்க்கஸை விட்டு வெளியேற முடிவு செய்து, உடனே அங்கிருந்து தப்பித்துள்ளது. பிறகு செய்வதறியாது மனிதர்கள் வாழும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளது.

இந்நிலையில், அந்த இரு யானைகளும், சர்க்கஸை விட்டு வெளியேறி. அங்கு கிடைத்த உணவுகளை சாப்பிட்டு மகிழ்வாக சுற்றி திரிந்துள்ளது. மேலும் அப்பகுதியில் பனிப்பொழிவு இருந்ததால், அந்த பகுதி சுற்றி வெறும் பனிகுவியல்கள் இருந்தன. இதில் பெண் யானை அங்கு குவிந்து கிடந்த பனிக்குவியலை பார்த்ததும் ஓடிச் சென்று விளையாட ஆரம்பித்துவிட்டது.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சர்க்கஸ் ஊழியர்கள் கர்லா மற்றும் ரன்னியை பிடிக்க முற்பட்டனர். அதில் ஒரு யானை பனிக்குவியல்களில் விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். பின்னர் அதனை அங்கு விட்டு வர மனமில்லை என்றும் குறிப்பிட்டனர்.

இதனிடையே சர்க்கஸ் ஊழியர்கள் இரு யானைகளையும் கயிறு கட்டி, இழுத்துச் சென்றனர். பின்னர் இரு யானைகளும் சர்க்கஸில் மீண்டும் வழக்கம்போல் அடைக்கப்பட்டது. இந்நிலையில், மனிதர்கள் போலவே விலங்குகளுக்கும் பல ஆசைகள் கொண்டிருக்கும் என்று இந்த நிகழ்வின் மூலம் தெரிய வருகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கனமழை எதிரொலி : புதுச்சேரி, காரைக்கால் – நாளை பள்ளி, கல்லூரி விடுமுறை!

புதுச்சேரி : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்,  கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…

8 seconds ago

“பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் முன்னிலை”…அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை! தவெக தலைவர் விஜய்க்கு பதிலடி ட்வீட்?

சென்னை : நேற்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு முதலில் தவெக தலைவர் விஜய்…

9 minutes ago

ஹாலிவுட்டில் நம்ம ஊரு மண்டேலா! யோகி பாபுவுக்கு அடித்த பம்பர் வாய்ப்பு!

சென்னை : ஹாலிவுட்டில் நம்ம ஊரு சிங்கம் என பெருமைப்படும் அளவுக்கு யோகி பாபு வளர்ச்சி கடல் அலைகளை போல…

30 minutes ago

‘சூறாவளி புயலாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்’! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருவாகவுள்ளது. அதன்படி, புயல்…

1 hour ago

கனமழை முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம்…முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்ட உத்தரவு!

சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறுகிறது. இந்த புயலுக்கு ஃபெங்கல்…

2 hours ago

அம்மை நோய் வந்தால் பராமரிக்கும் முறை ..!என்ன செய்யக்கூடாது.?

சென்னை :அம்மை நோய் வந்தால் வீட்டில் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததையும்  பற்றியும் இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம். அம்மை…

2 hours ago