இலங்கையில் அதிபர் தேர்தல் தேதி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம் !
இலங்கை அதிபர் தேர்தல் குறித்த அதிகார்பூர்வ அறிவிப்பை தேர்தல் அதிகாரி மஹிந்த தேசப்ரிய அறிவித்துள்ளார்.அதன்படி இலங்கை அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 16 ந் தேதி நடை பெறும் என்றும் அக்டொபர் 7 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் நடை பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இலங்கையில் நடைபெறும் அதிபர் தேர்தலில் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனா கட்சி சார்பில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜ பக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே போட்டியிடுவதாக தெரிவித்துள்ளது.இலங்கை சுகந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி அவர்களது வேட்பாளரை இன்னும் அறிவிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.