நாய்களுக்கு தேர்தலா? அமெரிக்காவில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாய்!
அமெரிக்காவில் உள்ள கெண்டக்கி மாகாண ரேபிட் ஹஷ் நகர மேயராக, நாய் ஒன்று தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், மக்கள் முடிவுகளுக்காக மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள கெண்டக்கி மாகாண ரேபிட் ஹஷ் நகர மேயராக, நாய் ஒன்று தேர்வு செய்யப்பட்டுள்ளது.
வில்பர் பேஸ்ட் என்ற, பிரெஞ்சு புல்டாக் வகையை சேர்ந்த நாய் மொத்தமாக பதிவான வாக்குகளில் சுமார் 22,85 வாக்குகளில், 13,143 வாக்குகளை பெற்று, மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரண்டாவது இடத்தை பிடித்த பீகல் இனநாயும், மூன்றாவது இடத்தை பிடித்த கோல்டன் ரிட்ரீவர் நாயும் தூதர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நாங்கு ஆண்களுக்கு ஒருமுறை இந்த தேர்தல் நடைபெற்று வருகிற நிலையில், 1990 முதல், மேயர் பதவிக்கு நாய்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.