ஒரு வழிக்கு வந்த உள்ளாட்சி தேர்தல்-91 ஆயிரத்து 975 பதவிகள்..! இன்று வேட்புமனு..! தாக்கல் செய்தவர்கள் எத்தணை பேர்-விபரம் உள்ளே

- தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புக்லுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.
- மொத்தம் 91 ஆயிரத்து975 பதவிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தா உள்ளாட்சி தேர்தல் வருது,அதோ வருகிறது என்று மூன்று வருடங்கள் கடந்து விட்ட நிலையில் தற்போது ஒரு வழியாக தேர்தல் நடைபெற உள்ளது.வருகின்ற 27 மற்றும் 30 தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது.
மேலும் இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டார் அதில் 27 மாவட்டங்களில் உள்ள 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள்,314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5 ஆயிரத்து 90 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகள்,9 ஆயிரத்து624 கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகள்,76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 91 ஆயிரத்து975 பதவிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
அதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கியது அதன்படி ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இன்று ஒரே நாளில் 3,217 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு – 2,834 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளது, கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு – 333 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளது ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு – 47 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளது,மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு – 3 வேட்புமனுக்கள் என்று பெறப்பட்டுள்ளது .மேலும் இந்த வேட்புமனுக்களை தாக்கல் செய்ய டிசம்பர் 16 வரை காலக்கேடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.