தேர்தலில் தோல்வி.! டிரம்பை விவாகரத்து செய்ய மெலனியா முடிவு..?

Published by
murugan

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பிடன் டொனால்ட் டிரம்ப்பை தோற்கடித்தார். இருப்பினும், ட்ரம்ப் தனது தோல்வியை இன்னும் ஏற்கவில்லை. ஜோ பிடனின் வெற்றி பெற்ற  ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு தேர்தலில் மோசடி செய்ததாக குற்றம் சாட்டினார்.

இந்தத் தேர்தலில் நான் வெற்றி பெற்றுள்ளேன், எனக்கு 7 கோடி 10 லட்சம் செல்லுபடியாகும் வாக்குகள் கிடைத்துள்ளன என்றும் டிரம்ப் கூறினார். இதற்கிடையில், மெலனியா தேர்தல் தோல்விக்குப் பின்னர் ட்ரம்பை விட்டு சென்றுவிடுவார் என்றுதகவல் வெளியாகி உள்ளது.

வெள்ளை மாளிகையை விட்டு டிரம்ப் வெளியேறியதும், அவரை மெலனியா டிரம்ப் விவகாரத்து செய்து விடுவார் என்று மெலனியா டிரம்பின் முன்னாள் உதவியாளர் ஸ்டீபனி வோல்கோஃப் கூறியுள்ளார். மேலும், டிரம்ப் – மெலானியாவின் மகன் போரனுக்கு சொத்தில் சமமான பங்கை வழங்க மெலனியா திருமணத்திற்கு பிந்தைய ஒப்பந்தத்தில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார் என கூறியுள்ளார்.

 அமெரிக்காவின் ஜனாதிபதி இல்லமான வெள்ளை மாளிகையில் டிரம்ப் மற்றும் மெலனியாவுக்கு தனி படுக்கையறைகள் இருப்பதாகவும் வோல்காஃப் குற்றம் சாட்டியுள்ளார்.  அதே நேரத்தில், டொனால்ட் டிரம்பின் முன்னாள் உதவியாளர் ஓமரோசா மணிகோல்ட் நியூமன் கூறுகையில், டிரம்ப் மற்றும் மெலனியாவின் 15 வருட திருமணம் இப்போது முடிந்துவிட்டது என்று கூறினார்.

டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியே வந்ததும் மெலனியா விவாகரத்து செய்வார் என்று ஒமரோசா கூறினார். ட்ரம்பை பழிவாங்க மெலனியா இப்போது ஒரு வழியைத் தேடுகிறார் என்று அவர் கூறினார்.

டிரம்ப் தனது இரண்டாவது மனைவி மார்லா மேப்பிள்ஸுடனான திருமண உறவை முறித்துக் கொண்ட ஒப்பந்தத்தின் படி, எந்த ஊடகங்களில் நேர்காணல் செய்யவோ அல்லது எந்த புத்தகங்களையும் வெளியிடவோ கூடாது என்று மார்லாவுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Published by
murugan

Recent Posts

குஜராத்தை துவம்சம் செய்த டெல்லி! இது தான் டார்கெட்!

குஜராத்தை துவம்சம் செய்த டெல்லி! இது தான் டார்கெட்!

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…

2 minutes ago

துரை வைகோ பதவி விலகல்: “நாளை சுமூகத் தீர்வு எட்டப்படும்” – மதிமுக பொருளாளர்.!

சென்னை : மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள மல்லை…

38 minutes ago

முடிஞ்சா எதிர்க்கட்சி தலைவர் ஆகுங்க பார்ப்போம்! எடப்பாடிக்கு சவால் விட்ட கருணாஸ்!

சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…

2 hours ago

குட் பேட் அக்லி படத்தில் நடித்துள்ள மலையாள நடிகர் ”ஷைன் டாம் சாக்கோ” கைது.!

சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில்,…

2 hours ago

மழையும் இருக்கு வெயிலும் இருக்கு! அலர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!

சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…

4 hours ago

அன்றே சூர்யாவை கணித்த ஜோதிடர்! ரெட்ரோ விழாவில் உண்மையை உடைத்துவிட்ட சிவகுமார்!

சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…

4 hours ago