வேட்பாளர் குற்ற வழக்கு விவரங்களை வெளியிட..தேர்தல் கமிஷன் உத்தரவு..
உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 13-ம் தேதி பிறப்பித்த உத்தரவின் படியும், தேர்தல் கமிஷன் ஏற்கனவே அறிவித்தபடியும் அனைத்து நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் அனைத்து கட்சிகளும் ஒவ்வொரு உத்தரவுகளையும் பின்பற்ற வேண்டும்.
வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டவரின் குற்ற வழக்கு விவரங்களையும், அவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட காரணத்தையும் அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும்.இந்த அனைத்து விவரங்களை சி-7 விண்ணப்பத்தில் கூறியப்படி பத்திரிகைகளிலும், அரசியல் கட்சியின் வலைத்தளபக்கத்திலும் வெளியிட வேண்டும்.
வேட்பாளரை தேர்வு செய்த 48 மணி நேரத்திற்குள்ளோ அல்லது முதல்கட்ட வேட்புமனு தாக்கல் செய்வதற்கான தேதிக்கு 2 வாரங்களுக்கு முன்பாகவே இந்த விவரங்களை வெளியிட வேண்டும்.
வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட 72 மணி நேரத்துக்குள் சி-8 விண்ணப்பத்தில் உள்ளபடி இந்த உத்தரவுகளை செயல்படுத்தியதற்கான அறிக்கையை அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் கமிஷனுக்கு அனுப்ப வேண்டும்.
இந்த உத்தரவுகளை நிறைவேற்ற தவறினால் அந்த கட்சி உச்சநீதிமன்றம் அவமதிப்பு வழக்கு மற்றும் தேர்தல் கமிஷனின் விதிகளை கடைபிடிக்க தவறியதாக கூறப்படும் என கடிதத்தில் தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.