எதிர்கட்சி தொடர்ந்த உள்ளாட்சி எதிர்ப்பு மனு..!தள்ளுபடி செய்ய ஆளும் கட்சி உச்சநீதிமன்றத்தில் திடீர் மனு..!
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் மூன்று வருடங்கள் கடந்து விட்ட நிலையில் தற்போது ஒரு வழியாக தேர்தல் நடைபெற உள்ளது.வருகின்ற 27 மற்றும் 30 தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது.
மேலும் இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டார் அதில் 27 மாவட்டங்களில் உள்ள 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள்,314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5 ஆயிரத்து 90 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகள்,9 ஆயிரத்து624 கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகள்,76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 91 ஆயிரத்து975 பதவிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கிடையில் தமிழகத்தில் எதிர்கட்சியாக உள்ள திமுக உச்சநீதிமன்றத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தமிழக அரசு அறிவித்த அறிவிப்பாணை எதிர்த்து மனு தாக்கல் செய்தது. தற்போது ஆளும் கட்சியாக உள்ள அதிமுக திமுகவின் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.