பாகிஸ்தானில் சாலை விபத்து… சம்பவ இடத்தில் 8 பேர் பலி…

பாகிஸ்தானில் நிகழ்ந்த கொடூர வாக விபத்தில் 8 பேர் மரணம்.
நம் அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டில் ஜீலம் மாவட்டத்தில் உள்ள காரிப்வால் என்னும் கிராமத்தில் சரக்கு லாரி ஒன்று வேன் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த கொடூர விபத்தில் 8 பேர் மரணமடைந்தனர், பலர் படுகாயமடைந்தனர்.
விபத்தில் சிக்கியவர்கள் அருகே உள்ள சிமெண்ட் தொழிற்சாலையில் பணிபுரிய தொழிலாளர்களை ஏற்றி கொண்டு சென்ற வேன் விபத்தில் சிக்கியது. இது குறித்த தகவல் அறிந்து மீட்பு பணி அதிகாரிகள் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்றனர். அவர்கள் பலியானவர்களின் உடல்களை மீட்டதுடன், காயமடைந்தவர்களை அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்
இதுகுறித்து அறிந்த பஞ்சாப் முதல் மந்திரி உஸ்மான் பஜ்தார் உயிரிழந்தவர்களுக்கு வருத்தம் தெரிவித்ததுடன், அந்த நிர்வாகத்திடம் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை அளிக்கும்படியும் கேட்டு கொண்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!
April 3, 2025
டிரம்ப் அதிரடி வரி விதிப்பு.! உலக நாடுகள் கடும் எதிர்ப்பு! சீனா, கனடா, ஆஸ்திரேலியா, தைவான்….
April 3, 2025