எப்பா… உன்கூட உள்ள அனுப்பிச்சி என்ன சாவடிக்கிறாங்கப்பா!
சுச்சித்ராவை தன்னுடன் உள்ளே அனுப்பி சாவடிப்பதாக பாலாஜி கூறுகிறார்.
45 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில், ஒவ்வொரு வாரமும் புது புது டாஸ்குகள் கொடுப்பது வழக்கம். அதுபோல, கடந்த வாரம் மணிக்கூண்டு டாஸ்க் கொடுக்கப்பட்டது. முறையாக விளையாடாத குழுவிலிருந்து பாலாஜி மற்றும் சுச்சித்ரா ஆகிய இருவரும் தனியாக கண்ணாடி அறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஏற்கனவே பாலாஜி சுச்சித்ராவுக்கு வெளியிலேயே பேசுவதற்கு உடனடியாக பதிலடி கொடுப்பார். இப்போது இவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பதால் குரூப்பிஸம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். பாலாஜி மற்ற போட்டியாளர்களுக்கு சாதகமாக பேசினாலும் சுச்சித்ரா பாலாஜியை குறை கூறுவதால் எப்போ உன் கூட உள்ள அனுப்பி என்னை சாவடிக்கிறாங்கப்பா என பாலாஜி கூறுகிறார். இதோ அந்த வீடியோ,
View this post on Instagram