முட்டையால் பளிச்சிடும் முகம் – எப்படி தெரியுமா?
சாதாரணமாக முட்டையை நாம் உணவாக மட்டும் தான் எடுத்துக் கொண்டு இருப்போம். சிலர் இதை முகத்தில் உபயோகிப்பது உண்டு, ஆனால் எப்படி உபயோகிப்பது என்று தெரியாமல் சரியான பலன் இல்லாமல் போய்விடும். இந்த முட்டை கொண்டு முகத்தை பளிச்சென்று செய்யலாம் . எப்படி என்று பார்க்கலாம்.
உபயோகிக்கும் முறை
தேவையான பொருட்கள் முட்டை மட்டுமே, முதலில் ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவேண்டும். மஞ்சள் கருவை இதில் சேர்க்கக்கூடாது. அதன்பின் முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும்.
பின் முட்டையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி குறைந்தது 30 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். அதன் பின்பு கடைசியில் முகத்தை சற்று வெதுவெதுப்பான நீரால் கழுவி துணியால் முகத்தை துடைத்து பயன்படுத்தலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகம் நிச்சயம் வெண்மை நிறம் அடையும்.