ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தநாளை கொண்டாடிய ‘ஈஸ்வரன்’ பட கதாநாயகி..!
தமிழ் சினிமாவின் இளம் நடிகையான நிதி அகர்வால் தனது பிறந்தநாளை ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டாடியுள்ளார்.
ஜெயம் ரவி நடித்த ‘பூமி’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் காலடி வைத்தவர் நிதி அகர்வால். இந்த படத்திற்கு பின் சிம்பு நடிப்பில் வெளியான ‘ஈஸ்வரன்’ படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார். இந்த இரண்டு படங்களின் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நிதி அகர்வாலுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தொடர்ச்சியாக குவிந்து வருகிறது.
இதனையடுத்து உதயநிதி ஸ்டாலினுக்கு ஹீரோயினாக மகிழ் திருமேனி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று நிதி அகர்வாலுக்கு 28 ஆவது பிறந்தநாள். இந்த பிறந்தநாளை கொண்டாடிய நிதி அகர்வால் முதியோர் இல்லத்திற்கு சென்று ஆதரவற்ற முதியவர்களுடன் மகிழ்ச்சியாக பேசி அவர்களுடன் கைகுலுக்கி தன் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார்.
மேலும், அந்த முதியோர் இல்லத்தில் வசித்து வரும் முதியவர்கள், மன நலம் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆகியோருக்கு இவரே உணவு பரிமாறி அவர்களுக்கு இன்பத்தை அளித்துள்ளார்.