கல்வி விசாக்கள் ரத்து.! அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு மாணவர்களுக்கு ஏற்பட்ட புதிய சிக்கல்.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
அமெரிக்க பல்கலைக்கழகங்களில் அதிகமாக இந்தியா, சீனா, மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து அதிகமான மாணவர்கள் பயிற்று வருகின்றனர். தற்போது, கொரோனா வைரஸ் காரணமாக நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை மற்றும் வருகை தடைபட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக கொரோனா பாதிப்புகள் குறையாத காரணத்தால், அமெரிக்க பல்கலைக்கழகங்கள் ஒரு முடிவை எடுத்துள்ளது. அது என்னவென்றால் இனி ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்க பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கினால், வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கல்வி விசாக்கள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டால் வெளிநாட்டு மாணவர்கள் நாட்டில் தங்க அனுமதி இல்லை.
அதிலும், முழுமையாக ஆன்லைன் மூலம் இயங்கும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் அமெரிக்காவில் தங்க அனுமதிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளிநாட்டு மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)