பொருளாதார நெருக்கடி:சிறந்த நிதி நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்த ஜனாதிபதி!
ஜனாதிபதி ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக சிறந்த பொருளாதார மற்றும் நிதி நிபுணர்கள் அடங்கிய குழுவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே அமைத்துள்ளார்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சேமற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சே ஆகியோரை பதவி விலக கோரி மக்கள் போராத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில்,பலதரப்பு ஈடுபாடு மற்றும் கடன் நிலைத்தன்மை தொடர்பான ஜனாதிபதி ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக சிறந்த பொருளாதார மற்றும் நிதி நிபுணர்கள் அடங்கிய குழுவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே நியமித்துள்ளார்.அதன்படி, இக்குழுவில் இடம் பெற்றவர்கள் கீழ்க்கண்டவாறு:
• டாக்டர் இந்திரஜித் குமாரசுவாமி – முன்னாள் ஆளுநர்,இலங்கை மத்திய வங்கி மற்றும் பொது செயலகத்தின் பொருளாதார விவகாரப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர்.
• பேராசிரியர்.சாந்தா தேவராஜன்– ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிப் பயிற்சிப் பேராசிரியர் மற்றும் முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணர்,உலக வங்கி.
- டாக்டர் ஷர்மினி கூரே – முன்னாள் இயக்குனர், IMF இன்ஸ்டிட்யூட் ஆப் கேபாசிட்டி டெவலப்மென்ட் மற்றும்முன்னாள் துணை இயக்குனர், ஆப்பிரிக்கா துறை,IMF.
ஜனாதிபதியின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள நிபுணர்கள் இலங்கை நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் ஈடுபடும் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதுடன், தற்போது நாட்டில் நிலவும் கடன் நெருக்கடியை நிவர்த்தி செய்து,இலங்கையின் நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய மீட்சிக்கு வழிவகுக்கும் வழிகாட்டல்களை வழங்குவர் என்று கூறப்படுகிறது.
Sri Lanka President appoints a team of economic and fiscal experts as Members of Presidential Advisory Group on Multilateral Engagement and Debt Sustainability pic.twitter.com/pjv3KCvYJf
— ANI (@ANI) April 7, 2022