எபோலா வைரஸ் மருந்தானது கொரோனாவை எதிர்த்து போராடுகிறது.!
எபோலா வைரஸை கட்டுப்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட ரெம்டெசிவிர் மருந்தானது கொரோனா வைரஸை கட்டுப்படுத்துமா? என கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கப்பட்டு ஆய்வு நடைபெற்று வருகிறது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மருந்து கண்டறியும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், எபோலா வைரஸை கட்டுப்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட ரெம்டெசிவிர் மருந்தானது தற்போது கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.
கிலியட் சைன்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த ரெம்டெசிவிர் மருந்தானது கொரோனா நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டது. அப்போது 15 நாட்களாக இருந்த கொரோனா சிகிச்சை 10 நாளாக குறைந்துள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய் ஆராய்ச்சி அமைப்பானது 1,063 கொரோனா நோயாளிகளை கொண்டு ஆய்வு நடத்தியது. அதில், சிலருக்கு மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மற்றவர்களுக்கு வேறு மருந்துகள் கொடுக்கப்பட்டது.