சர்க்கரை நோய் வராமல் பாதுகாக்கப்பட இந்த பழத்தை சாப்பிடுங்க…!

Default Image

பேரிக்காயில் உள்ள உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய மருத்துவக் குணங்கள். 

நம்மில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் பல வகையான பழங்களை விரும்பி சாப்பிடுவது உண்டு. அந்த வகையில் பேரிக்காயும் நாம் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று. பேரிக்காயில் நமது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பலவகையான நல்ல சத்துக்கள் உள்ளது. இதில் நார்ச்சத்து தான் அதிகமாக காணப்படுகிறது. மேலும் இதில் குறைந்த அளவு கலோரிகள் தான்  காணப்படுகிறது.

உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் இந்த பழத்தை உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கொழுப்புக்கள் தங்குவதை தவிர்த்து உடல் எடையையும் குறைக்கலாம். மேலும், இது உண்ணும் உணவில் உள்ள கொழுப்பு வயிற்றில்  சேராமல் தடுக்கும் ஆற்றல் உள்ளது.

சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறுநீரக பிரச்சினைகள் சரி செய்யப்படுவதோடு, சிறுநீரில் காணப்படுகிற கிருமிகளையும் வெளியேற்ற இது உதவுகிறது.

Heartபேரிக்காய் எலும்புகள், பற்கள் ஆகியவற்றுக்கு பலம் அளிக்கிறது. மேலும் இது இதயத்தை வலுவாக்கும். ஜீரண கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

பேரிக்காய் தோலின் துவர்ப்புத் தன்மைதான் அதிகம் சக்தி கொண்டது.  பேரிக்காயை தோலுடன் சாப்பிடும்போது அது இதயநோய் ஏற்படாமல் பாதுகாப்பதோடு, சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live , Cyclone Fengal
LIVE NEWS TAMIL
Vaibhav Suryavanshi father
fishermen -Cyclone - Weather
TN Rain Update
vijaya (20) (1)
Goutam Adani - Rahul Gandhi