ஆண்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வதற்கு இந்த உணவுகளை சாப்பிடுங்கள்…!

Default Image

பெரும்பாலும் தவறான உணவு பழக்கங்கள் கூட மலட்டுத் தன்மை உருவாகுவதற்கு காரணமாக உள்ளது. குறிப்பாக ஆண்கள் உடலில் விந்தனுக்கள் எண்ணிக்கையில் குறைபாடு ஏற்படும் பொழுது, இது கருவுறுதலை தடை செய்கிறது. எனவே ஆண்களின் உடலில் விந்தணுக்கள் அதிகரிக்க வேண்டுமானால் சரியான ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் தவறான உணவு பழக்கம் உள்ள ஆண்கள் பலருக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், குழந்தை பெற முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இது பலருக்கும் சிக்கலான ஒன்றாகவே உள்ளது. மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு, விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க செய்வதற்கு பதிலாக தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு கீழ் குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய முடியும். இவற்றை குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

பூசணி விதைகள்

பூசணி விதைகளில் இயற்கையாகவே அதிக அளவில் துத்தநாகம் உள்ளது. இது ஆண்கள் பாலியல் வாழ்வின் ஆரோக்கியத்துக்கு உதவுவதுடன், இந்த துத்தநாகம் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனின் அளவை அதிகரிக்க உதவுகிறது. எனவே, இதன் மூலமாக விந்தணுக்களின் இயக்கம் மற்றும் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும்  இந்த பூசணி விதைகள் உதவுகிறது.

அடர் பச்சை காய்கறிகள்

greenvegetables

வைட்டமின் பி6, போலிக் அமிலம் ஆகியவை அடர் பச்சை நிற காய்கறிகள் மற்றும் கீரை வகைகளில் அதிக அளவில் காணப்படுகிறது. குறிப்பாக முட்டை கோஸ், கீரை வகைகள் அனைத்திலும் இவை அதிக அளவில் காணப்படுகிறது. இது ஆரோக்கியமான மற்றும் வலுவான விந்தனுக்களை உருவாக்குவதற்கு பெரிதும் உதவுகிறது.

கிவி பழம்

விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க செய்வதில் வைட்டமின் சி பெரிதும் பயன்படுகிறது. எனவே கிவி பழத்தை அதிகம் எடுத்து கொள்ளும் போது, அதிலுள்ள வைட்டமின் சி விந்தணுக்களின் இயக்கம் மற்றும் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதுடன், விந்தணுக்களின் வடிவத்தையும் மேம்படுத்தும் என ஆராய்ச்சி ஒன்றில் கூறப்படுகிறது. சிவப்பு மிளகு, தக்காளி, ப்ராக்கோலி மற்றும் முட்டைக்கோஸ் ஆகியவற்றில் இந்த வைட்டமின் சி அதிக அளவில் காணப்படுகிறது.

ஒமேகா 3 கொழுப்பு

சால்மன் மீனில் அதிக அளவு ஒமேகா 3 கொழுப்பு அமிலம் காணப்படுகிறது. இதில், மட்டுமல்லாமல் மத்தி, கானாங்கெளுத்தி, ஹில்சா ஆகிய மீன்களிலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் காணப்படுகிறது. இவை விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கையை மேம்படுத்த உதவுகிறது. மீன் சாப்பிடத்தவர்களாக இருந்தால், சியா விதைகள் மற்றும் ஆளி விதைகளில் இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலம் காணப்படுகிறது. எனவே இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக ஆண்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்ய முடியும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்